கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்தில், சென்னையிலிருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர். முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் இருக்கையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 160 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. கேரளாவிற்கு கடத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.