மார்த்தாண்டத்தில் நேற்று மத போதகர் ஜெஸ்லின் ஜாய் (43) தனது மனைவி புனிஜோவுடன் (35) பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த மற்றொரு பைக் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் புனிஜோ படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஜெஸ்லின் ஜாய் அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.