கன்னியாகுமரி மாவட்ட ஊர்காவல் கண்காணிப்பு திட்டத்தின் கீழ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஞாயிற்றுக்கிழமை புதுக்கடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட விளாத்துறை காமராஜர் படிப்பகத்தின் முன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் புதுக்கடை போலீசார் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதுவரை இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் மொத்தம் 1315 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன, இது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.