கிள்ளியூர்: தமிழகத்தின் சிறந்த திமுக பேரூர் செயலாளர் தேர்வு

0
19

திமுக தலைமை கழகம் சார்பில் ஆண்டுதோறும் கட்சிப் பணிகளில் சிறப்பாக செயல்படும் நிர்வாகிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, குமரி மேற்கு மாவட்டம், கிள்ளியூர் பேரூராட்சி திமுக செயலாளர் சத்யராஜ் சிறந்த பேரூராட்சி செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் 17-ம் தேதி கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவருக்கு விருது வழங்க உள்ளார். இந்த விருது, கட்சிப் பணிகளில் அவரது சிறப்பான பங்களிப்பைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here