கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மாலையில் ஸ்ரீதேவி பூதேவி சமய இடர் தீர்த்த பெருமாள் திருக்கல்யாண வைபோக நிகழ்ச்சியும், கருட சேவை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.