கொல்லங்கோடு காவல் நிலைய போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பூத்துறை பகுதியில் இருந்து படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் ஏற்றிக் கொண்டு சொகுசு கார் ஒன்று கேரளா நோக்கி வருவதாக தகவல் கிடைத்தது.
அப்போது சம்பந்தப்பட்ட கார் இரவு சுமார் 11.30 மணி அளவில் சிலுவைபுரம் என்ற பகுதியில் வந்துள்ளது. உடனே போலீசார் வாகனத்தை தடுத்து நிறுத்தி டிரைவருடன் காரை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கொல்லங்கோடு காவல் நிலையம் கொண்டு வந்தனர். அடுத்து சொகுசு கார், மண்ணெண்ணெய் மற்றும் காரை ஓட்டி வந்த டிரைவர் ஆஸ்டின் ராஜ் ஆகியோரை நாகர்கோவில் குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.