ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் வணிகவரி துறை சங்கம், ஊரக வளர்ச்சித் துறை, உதவி வேளாண்மை அலுவலர் சங்கம், உதவி தோட்டக்கலை அலுவலர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு துறை சங்கங்கள் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.