கருங்கல், கண்ணன்விளை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மகள், அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளி அருகே ஏற்பட்ட புகை மூட்டத்தால் மாணவிகள் தும்மியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர் மாணவிகளைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
தலைமை ஆசிரியர் தனது மகளைத் தாக்கியதில், அவர் காலில் பலத்த காயமும் வீக்கமும் ஏற்பட்டதாக மணிகண்டன் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கருங்கல் அரசு மருத்துவமனையில் மாணவி சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.