குழித்துறை பகுதியைச் சேர்ந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் (47), கடந்த 30ஆம் தேதி சங்கரன்கோவிலில் பாதுகாப்பு பணிக்குச் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. அருமனை போலீஸ் குடியிருப்பில் அவரது செல்போனும் பைக்கும் கிடந்தன. இது குறித்து அவரது மனைவி சிமி அருமனை போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். லட்சுமணன் மாயமாகி 10 நாட்களுக்கு மேல் ஆனதால் மர்மம் நீடித்து வருகிறது.