குன்னத்தூர், மாத்திவிளையைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட கோகுல் குமார் (28) என்பவர், தனது வீட்டில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டுவிளை பகுதியில் உள்ள மரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். சம்பவத்தன்று மாலை 7 மணி அளவில் கழுத்தில் சேலையுடன் சுற்றித் திரிந்ததாகக் கூறப்படுகிறது. புதுக்கடை போலீசார் அவரது உடலை மீட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.