திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த ஜமாஅத் செயலாளர் சையது முகமது அஸ்லாம் (46) என்பவரை, நிலத்தகராறு காரணமாக ஷேக் முகமது (58) என்பவர் கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. ஜமாஅத்துக்கு சொந்தமான நிலத்தை ஷேக் முகமது விற்பனை செய்ததாகவும், அதை மீட்க நிர்வாகிகள் முயன்றதாகவும் கூறப்படுகிறது. இந்த விரோதத்தின் காரணமாக, ஷேக் முகமது, சையது முகமது அஸ்லாம் வீட்டிற்குச் சென்று கொலை முயற்சி செய்ததாகப் புகாரளிக்கப்பட்டுள்ளது. தக்கலை போலீசார் ஷேக் முகமது மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.