நித்திரவிளை பகுதியை சேர்ந்த பிரைட் என்பவர் செங்கவிளை பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். அவரது மகள் அபினயா (20) கல்லூரி மாணவி. கடந்த 7ஆம் தேதி, ஹோட்டல் முன்பக்கம் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, இடத்தின் உரிமையாளர் சுனில் குமார் மற்றும் அவரது மனைவி மஞ்சு ஆகியோர் தகாத வார்த்தை பேசி, கழிவுநீரை அபினயா மீது ஊற்றி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கொல்லங்கோடு போலீசார் கணவன் மனைவி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.