நித்திரவிளை: சாலையில் தடுமாறி விழுந்த மீனவர் உயிரிழப்பு

0
39

நித்திரவிளை அருகே பூத்துறை பகுதியைச் சேர்ந்த 65 வயது மீன்பிடி தொழிலாளி வர்கீஸ், நேற்று முன்தினம் இரவு சின்னத்துறை சாலையில் நடந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் பின் தலையில் பலத்த காயமடைந்த அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வர்கீஸ் மகள் பிரின்சி அளித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here