பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு இலவச வேஷ்டி சேலைகளை வழங்கி வருகிறது. நாகர்கோவில் வடசேரியில் உள்ள பெரிய அரசுங்கன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் சார்பில் வேஷ்டிகள் தயாரிக்கப்பட்டு, தற்போது பார்சல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் மூன்று மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில், வேஷ்டி சேலைகள் முன்கூட்டியே தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.