கட்டிட விதிமீறல் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் தந்தைக்கு நோட்டீஸ்

0
30

நடிகர் அல்லு அர்​ஜுனின் தந்​தை​யான அல்லு அர்​விந்த் ஹைத​ரா​பாத்​தில் கீதா ஆர்ட்​ஸ், அல்லு ஆர்ட்ஸ் எனும் பெயர்​களில் திரைப்பட தயாரிப்பு நிறு​வனங்​களை நடத்தி வரு​கிறார். இவற்​றின் அலு​வலக கட்​டிடம் ஜூப்ளி ஹில்ஸ் சாலை எண் 45-ல் அமைந்​துள்​ளது.

இந்த கட்​டிடத்​துக்கு 4 அடுக்​கு​கள் மட்​டுமே கட்ட ஹைத​ரா​பாத் மாநக​ராட்சி அனு​மதி அளித்​துள்​ளது. ஆனால் கடந்த 2023-ல் அனுமதி பெறாமலேயே 5-வது மாடி கட்​டப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில் அல்லு அர்​விந்​துக்கு ஹைத​ரா​பாத் மாநக​ராட்சி திட்ட அதி​காரி நேற்று நோட்​டீஸ் பிறப்​பித்​துள்​ளார். அதில், “நிபந்​தனை​களை மீறி கட்​டப்​பட்ட 5-வது மாடியை நாங்​கள் ஏன் இடிக்க கூடாது?” என விளக்​கம் கோரி​யுள்​ளார்.

அல்லு அர்​விந்​தின் தாயார் சமீபத்​தில் தான் மரணமடைந்​தார். 15 நாட்​கள் கூட ஆகாத நிலை​யில், இந்த நோட்​டீஸ் பிறப்​பிக்கப்பட்டதற்கு அரசி​யல் காழ்ப்​புணர்வே காரணம் என அல்லு அர்​ஜுனின் ரசிகர்​கள் தெரிவிக்​கின்​றனர்.

புஷ்பா 2 திரைப்​படம் வெளி​யான​போது, கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயி​ரிழந்​தார். அவரது மகன் இன்​ன​மும் மருத்​துவ சிகிச்சை​யில் உள்​ளார். இந்த நிகழ்வை தொடர்ந்து கைது செய்​யப்​பட்ட நடிகர் அல்லு அர்​ஜுன் பிறகு ஜாமீனில்​ விடு​தலை செய்யப்பட்டார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here