சாத்தன்கோடு பகுதியைச் சேர்ந்த வில்சன் என்பவரின் அடிதடி வழக்கில் சாட்சியாக உள்ள டென்னிஸ் (48) என்பவருக்கும், வில்சனுக்கும் இடையே விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் (சனிக்கிழமை) மாலை, டென்னிஸ் வில்சனின் வாழைத்தோட்டத்தில் அத்துமீறி நுழைந்து வாழை மரங்களை வெட்டி சாய்த்தார். இதைத் தட்டிக் கேட்ட வில்சனின் மனைவி ஷீஜா ஜான்சியை அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து ஷீஜா ஜான்சி நித்திரவிளை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து டென்னிஸை நேற்று கைது செய்தனர்.