குளச்சல் சட்டமன்ற தொகுதியில் திமுக இளைஞர்களுக்கு சமூக வலைத்தள பயிற்சி முகாம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. குமரி கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ்திசன் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், குளச்சல் நகர்மன்ற தலைவர் நசீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சமூக வலைத்தள பயிற்சியாளர் இளமாறன் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தார்.