குமரி மாவட்டத்தில் கடந்த 60 ஆண்டுகளாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கொண்டாடப்பட்டு வந்த ஆயுத பூஜை விழா இந்த ஆண்டு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வரும் ஒன்றாம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில், இது குறித்து வலியுறுத்தி குளச்சல் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கம் மற்றும் பி.எம்.எஸ். சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் சந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.