திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில், தென் மண்டல மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் கலந்துகொண்டார். இக்கூட்டம் திமுகவின் உட்கட்டமைப்பு மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதித்ததாகக் கூறப்படுகிறது.