நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (50) என்பவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். மறுநாள் காலையில் அது மாயமாகி இருந்தது. இதுகுறித்து வடசேரி போலீசில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மருங்கூரைச் சேர்ந்த கணேஷ் (27) என்பவரை கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.