பூதப்பாண்டி வனச்சரகம் சார்பில், மாவட்ட வன அலுவலர் பிரசாந்த் உத்தரவின் பேரில், பறவைகள் சரணாலயத்தில் நேற்று மெகா பிளாஸ்டிக் ஒழிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வனச்சரக அலுவலர் அன்பழகன், சமூக வனச்சர அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கப்பட்டது. கல்லூரி மற்றும் பள்ளி தேசியப்படை மாணவர்கள் சுமார் 400 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் கழிவுகளை தன்னார்வமாக சேகரித்தனர். மேலும், பிளாஸ்டிக் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.