இரணியல்: அம்மன் கோயிலை உடைத்து நகை, பணம் திருட்டு

0
85

இரணியல் அருகே சுனைப்பாறை மலை மீதுள்ள பத்ரகாளி அம்மன் மாடன் கோயிலில் இன்று காலை பூசாரி சரவணன் கோயில் நடை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கோயில் நிர்வாகி ராமசாமி வந்து பார்த்தபோது, சுமார் 2 கிராம் தங்க தாலி மற்றும் உண்டியல் காணிக்கை பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here