அருமனை பகுதியை சேர்ந்த ஜீனா (42) என்பவர் தனியார் நிதி நிறுவனத்தில் 4 கிராம் நகையை அடகு வைத்திருந்தார். நகையை மீட்க சென்றபோது அது காணாமல் போனதாக நிதி நிறுவனத்தினர் கூறியுள்ளனர். இது குறித்து ஜீனா அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நேற்று ஜீனா நிறுவனத்திற்கு சென்று நகையை திருப்பி தரக்கோரி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அருமனை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி, வருகிற வியாழக்கிழமை நகையை திருப்பிக் கொடுப்பதாக உறுதி அளித்தனர்.