உத்திரங்கோடு பகுதியைச் சேர்ந்த 25 வயது ஓட்டல் தொழிலாளிக்கும், கேரளாவைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் நடந்தது. தற்போது அருமனை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் அந்தப் பெண்ணின் வீட்டில், பக்கத்து வீட்டில் வசிக்கும் போவாஸ் (55) என்பவர் நேற்று புகுந்து பாலியல் தொல்லை அளிக்க முயன்றார். பெண் சத்தம் போடவே போவாஸ் தப்பி ஓடினார். புகாரின் பேரில் அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து போவாஸை தேடி வருகின்றனர்.