தடகள வீரர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை!

0
62

மாநிலங்களுக்கு இடையேயான 64-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் தமிழகம் 11 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலப் பதக்கங்களுடன் 195 புள்ளிகளை குவித்து ஒட்டுமொத்த சாம்பியன் ஆனது. மேலும் ஆடவர் பிரிவில் 101 புள்ளிகளையும், மகளிர் பிரிவில் 90 புள்ளிகளையும் பெற்று அணிகள் பிரிவில் முதலிடம் பிடித்தது.

400 மீட்டர் ஓட்டத்தில் புதிய தேசிய சாதனையை படைத்த தமிழகத்தின் டி.கே. விஷால் சிறந்த வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் தமிழக வீரர், வீராங்கனைகளின் செயல்திறனை அங்கீகரிக்கும் விதமாக, தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் நேற்று சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் பதக்கம் வென்றவர்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

தங்​கப் பதக்​கம் வென்​றவர்​களுக்கு தலா ரூ.25 ஆயிர​மும், வெள்​ளிப் பதக்​கம் வென்​றவர்​களுக்கு தலா ரூ.15 ஆயிர​மும், வெண்​கலப் பதக்​கம் வென்​றவர்​களுக்கு தலா ரூ.10 ஆயிர​மும் பரிசு வழங்​கப்​பட்​டது. அதேவேளை​யில் 400 மீட்​டர் ஓட்​டத்​தில் புதிய தேசிய சாதனை படைத்த டி.கே.விஷாலுக்கு ரூ.50 ஆயிரம் சிறப்பு பரிசும், மீட் சாதனை படைத்த மற்ற விளை​யாட்டு வீரர்​களுக்கு ரூ.10 ஆயிர​மும் பரி​சாக வழங்​கப்​பட்​டது.

நிகழ்ச்​சி​யில் தமிழ்​நாடு தடகள சங்​கத்​தின் சேர்​மன் டபிள்​யூ.ஐ.தே​வாரம், தலை​வர் டி.கே.​ராஜேந்​திரன்​, செய​லா​ளர்​ சி.ல​தா உள்​ளிட்​டோர்​ கலந்​து கொண்​டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here