ஸ்பெயினில் நடைபெற்ற உலக நடனப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட 51 நாடுகளைச் சேர்ந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர். இதில் குமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த சுபின் என்பவர் 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார். சுபினின் இந்தச் சாதனைக்காக அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் அவரைப் பாராட்டியுள்ளனர். கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சுபினை நேரில் அழைத்து நேற்று வாழ்த்திப் பாராட்டினார்.