சென்னையில் நடந்த மாநில அளவிலான தடகளப் போட்டியில், இரணியல் காரங்காடு பகுதியைச் சேர்ந்த சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்கப் பொறியியல் கல்லூரி மாணவர் சஜின், 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடத்தையும், 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடத்தையும் வென்று சாதனைப் படைத்தார். அவரது இந்த வெற்றிக்கு கல்லூரி நிர்வாகிகளும், அரசியல் தலைவர்களும், பிரமுகர்களும் வாழ்த்துத் தெரிவித்தனர்.