கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த ராஜு (59) என்ற ஆக்கர் தொழிலாளியை, அதே ஊரைச் சேர்ந்த தேவராஜ் (52) என்பவர் கம்பியால் தாக்கிக் காயப்படுத்தியுள்ளார். ராஜு தனது ஆக்கர் பொருள்களை தேவராஜ் கடைக்குப் பதிலாக வேறு கடைகளில் விற்றதால் இந்தத் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த ராஜு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.