மணிப்பூரில் மின்சாரம் தாக்கி திருவிதாங்கோடு ராணுவ வீரர் உயிரிழப்பு

0
144

மணிப்பூரில் ராணுவ முகாமில் தற்காலிக கூடாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த வைகுந்த் (28) என்ற ராணுவ வீரர் உயிரிழந்தார். நவம்பர் மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில், இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் நேற்று (ஆகஸ்ட் 21) இரவு விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து ராணுவ வாகனத்தில் இன்று (ஆகஸ்ட் 22)   வெள்ளிக்கிழமை சொந்த ஊரான திருவிதாங்கோட்டிற்கு கொண்டுவரப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here