குமரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடமிருந்து 62,638 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதுவரை 120 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
சொத்து வரி, பிறப்பு சான்றிதழ், பெயர் மாற்றம், மின் கட்டண பெயர் மாற்றம், புதிய மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 4724 மனுக்களுக்கு தீர்வுகள் காணப்பட்டு அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.