கடையால் மூடு பகுதியைச் சேர்ந்த பாத்திமா(67) என்பவர் வீட்டில் தனியாக இருந்தபோது, பர்தா அணிந்து வந்த பெண் ஒருவர் பேச்சு கொடுத்து, மதிய உணவு பெற்றுக்கொண்டு, பின்னர் பாத்திமா தொழுகைக்கு சென்றபோது அவரது செல்போனை திருடிச் சென்றார். இது குறித்து பாத்திமா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.