காப்புக்காடு பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் பழமையான செயல்முறை கிட்டங்கியை மறுசீரமைப்பு செய்ய தமிழ்நாடு அரசு ரூ. 13 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. தரைதளம் மற்றும் கட்டிட பராமரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.