கொல்லங்கோடு வட்டார டி ஒய் எப் ஐ மாநாடு கண்ணநாகம் இ. எம். எஸ் சென்டரில் நேற்று நடைபெற்றது. வட்டார செயலாளர் ரமேஷ் கொடியேற்ற, துணை தலைவர் ஆனந்த் பாபு தலைமை வகித்தார். வாலிபர் சங்க மாவட்ட இணை செயலாளர் ரமேஷ் மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் விஷ்ணு நிறைவுரையாற்றினார். கொல்லங்கோடு ஆரம்ப சுகாதார நிலையத்தை முழுநேர மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.