தக்கலை அருகே மணலியில் 2003-ல் ரூ. 3 லட்சத்து 45 ஆயிரம் கள்ள நோட்டுகளுடன் கைது செய்யப்பட்ட கிளைமன்ட், அமல்ராஜ் ஆகியோருக்கு பத்மநாபபுரம் நீதிமன்றம் ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் தலா ஐயாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. வழக்கு விசாரணையின் போது தலைமறைவான சசி என்பவரின் வழக்கு தனியாக நடக்கிறது. வெனான்சியஸ் என்பவர் இறந்துவிட்டார்.














