கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மேலகிருஷ்ணன் புதூரில் நேற்று மாலை தர்ணா போராட்டம் நடைபெற்றது. வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும், 100 நாள் வேலை வழங்க வேண்டும், கடை மடைக்கு தண்ணீர்விட வேண்டும் சுடுகாடு வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் விவசாய சங்கத் தலைவர் மலவிளை பாசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.














