குலசேகரத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா நர்சிங் கல்லூரி விளையாட்டு விழா நிகழ்ச்சி நேற்று (ஜூலை 31)தொடங்கியது. வரும் 5-ம் தேதி வரை மாணவ மாணவிகளின் பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன. இதன் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கல்லூரி முதல்வர் சொப்னா நாயர் வரவேற்றார். நிகழ்ச்சியில் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார். கல்லூரி மேலாளர் ஹரி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.














