மார்த்தாண்டம் புதிய பஸ் நிலையம் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதனால் கட்டடத்தின் சில பகுதிகள் சேதமடைந்து காணப்பட்டது. இந்த நிலையில் குழித்துறை நகராட்சி சார்பில் ரூ. 66 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு புனரமைப்பு பணிகள் நடைபெற்றன.
மேலும் அனைத்து பழுதுகளும் நீக்கி, புதிய இருக்கை வசதிகளும் செய்யப்பட்டன. புனரமைக்கப்பட்ட பஸ் நிலையத்தை நகராட்சித் தலைவர் பொன்.ஆசைதம்பி நேற்று மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் பொறியாளர் குறள்செல்வி, கவுன்சிலர்கள் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.