களியக்காவிளை: நூதன பண மோசடி.. 2 பேர் மீது வழக்கு

0
94

மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபின் ஜோசப் (45). இவர் ஒரு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக உள்ளார். இவரிடம் காரோடு பகுதியைச் சேர்ந்த அபிஜா, அவரது கணவர் சரத், ஆகியோர் களியக்காவிளை பகுதியில் உள்ள ஒரு வங்கியில் அடமானத்தில் உள்ள நகையை மீட்க ரூ. 5 லட்சத்து 8 ஆயிரம் உதவி கேட்டனர். பிரபின் ஜோசப் இருசக்கர வாகனத்தில் களியக்காவிளை பகுதிக்கு இன்று பணத்துடன் சென்றுள்ளார். அங்கு கணவன் மனைவி பணத்துடன் மாயமானார்கள். பிரபின் ஜோசப் இது குறித்து களியக்காவிளை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here