பாறசாலை பகுதியைச் சேர்ந்தவர் ஜிஜோ (23). இவர் தனது பைக்கில் இன்று ஊரம்பிலிருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது மங்குழிச் சர்ச் பக்கம் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் நிறுத்தி இருந்த டெம்போ மீது பைக் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜிஜோ நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக ஜிஜோவின் தந்தை ஜெயதாஸ் கொல்லங்கோடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் டெம்போ டிரைவர் வின்சென்ட் (53) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.