கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு மாதமும் பங்குனி மாதம் நடக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்கத் திருவிழா மிகவும் பிரபலம். இதேபோல் இவ்வாண்டைய நிறைப்புத்தரி சடங்கானது நேற்று (ஜூலை 27) நடைபெற்றது. இதில் நெற்கதிர்கள் அடங்கிய கட்டுகளை பூஜையில் வைத்து பின்னர் அது பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதனால் விவசாயம் செழிக்கும், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது ஐதீகம். நேற்று ஏராளமான பக்தர்கள் வந்து நிறைப்புத்தரியை வாங்கிச் சென்றனர்.