கன்னியாகுமரி மாவட்டத்தில் புத்தளம், மணக்குடி போன்ற பகுதிகளில் பூ நாரைகள் அதிக அளவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வருகை தந்தன. அண்மைக்காலமாக பூநாரைகள் வருகை இந்த பகுதிகளில் குறைந்துள்ளது. ஆயிரக்கணக்கில் வந்த பூநாரைகள் தற்போது நூற்றுக்கணக்கில் மட்டுமே வருகின்றன. இதற்கு சூழலியல் மாற்றம் என்று பறவை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். பூ நாரைகளுக்கு தேவையான இரை கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.