திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 2008 திருவிளக்கு பூஜை, சமய மாநாடு நேற்று (ஜூலை 27) இரவு நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் முதல் குத்துவிளக்கை மோகன்குமார், உமாதேவி ஆகியோர் ஏற்றினர். அகில பாரத விவேகானந்தா கேந்திர உதவி தலைவர் நிவேதா, வெள்ளிமலை இந்து தர்மவித்யா பீட தர்ம கர்த்தா சைதன்யானந்தஜி மகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர். திருவிளக்கு பூஜை நடைபெறும் அதேவேளையில் கோவில் விளக்கணி மாடத்தில் உள்ள விளக்குகளுக்கு ஒளியேற்றும் லட்ச தீபவிழா நடந்தது. பெண்கள், சிறுமியர் ஏராளம் பேர் கலந்து கொண்டனர்.