குளச்சல் அருகே பிலாங்கரைகாலனியை சேர்ந்தவர் கமலம் (72). வெள்ளியாகுளம் ஏலா பகுதியில் உள்ள தோப்பில் வேலை செய்து வந்தார். இதற்காக அங்கு தகர கொட்டகை அமைத்து தனியாக தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் கமலம் தீயில் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். அங்கு மண்ணெண்ணெய் சிந்தி கிடந்தது. எனவே கமலம் தீக்குளித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது குறித்து குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.