தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி, மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, இன்று 21-ம் தேதி ஆய்வு மேற்கொண்டு, மாணவ மாணவியர்களை நேரில் சந்தித்து, கலந்துரையாடினார். அவர் பேசுகையில் – அரசு பள்ளி மாணவர்கள் சிலர், தேசிய அளவிலான முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயிலும் வாய்ப்பை பெற்றுள்ளனர். இந்த கல்வி ஆண்டிலும், அதிகமான அரசு பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான போட்டித்தேர்வுகளில் கலந்துகொண்டு, தேசிய முன்னணி கல்வி நிறுவனங்களில் பயிலும் வாய்ப்பை பெற வேண்டும் என பேசினார். தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள், கலந்துகொண்டார்கள்.