தக்கலை ஊராட்சி ஒன்றியம் நுள்ளிவிளை ஊராட்சியில் குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக பொதுமக்கள் அதிகாரிகளுக்கு மனு கொடுத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மேல்பாறை பகுதி பெண்கள் 3 ஆண்டுகளுக்கு மேலாக சீராக குடிநீர் கிடைக்கவில்லை என்று கூறி ஊராட்சி அலுவலகம் உள்ளே காலி குடங்களுடன் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்ததும் தக்கலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி ஜெயா உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியதை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.