மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் சுதாகரன் (71). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் திருமணமான தனது மகளுடன் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் வசித்து வருகிறார். இதனால் மருதங்கோட்டில் உள்ள வீடு பூட்டி கிடந்தது. சம்பவ தினம் உறவினர்கள் போன் செய்து வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கூறினார். இதை அடுத்து சுதாகரன் தனது மகளுடன் மருதங்கோடு வந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த 2 லேப்டாப்கள், ஒரு பைக் மற்றும் சில பொருட்கள் திருட்டு போனது தெரிந்தது. இது குறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.