கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள நீண்ட கரை பகுதியில் தனியார் கல்லூரிக்குச் சொந்தமான இடம் ஒன்று உள்ளது. தற்போது இந்தக் கல்லூரி செயல்பாட்டில் இல்லை. கல்லூரிக்குச் சொந்தமான இடத்தில் மனித எலும்புக்கூடு ஒன்று கிடப்பதாக ராஜாக்கமங்கலம் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு மனித தலை, கை, கால் உள்ளிட்ட எலும்புகள் கிடந்தன. அவற்றைப் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு யாருடையது என்றும், எப்படி இங்கு மனித எலும்புக்கூடு வந்தது, கொலை செய்யப்பட்ட நபரை மர்ம ஆசாமிகள் இங்கு போட்டார்களா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.