கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 3வது வார்டு தென்றல் நகர் மற்றும் லேக்வியூ சாலைப் பகுதிகளில் ரூ. 28 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவில் மேயர் மகேஷ் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மண்டலத் தலைவர் செல்வகுமார், கவுன்சிலர் அருள் சபிதா ரெக்ஸலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.