கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரம் 13வது வார்டுக்கு உட்பட்ட ராஜபாதை பகுதியில் வாழும் மக்களுக்கு பட்டாக்கள் சம்பந்தமாக இருக்கும் குளறுபடிக்கு தீர்வு காண அப்பகுதி மக்கள் சார்பில் முன்னாள் அமைச்சரும் தமிழக உணவு ஆணைய தலைவருமான சுரேஷ் ராஜனை நேற்று சந்தித்து மனு அளித்தனர். இது சம்பந்தமாக தக்க தீர்வு காண முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயற்சிகளை மேற்கொள்வேன் என்று அவர்களிடம் உறுதி அளித்தார்.