மண்டைக்காடு அருகே புதூர் சிஆர்எஸ் நகரை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ். சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஆண்டனியை தாக்கியதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று அங்குள்ள குருசடி அருகே ஸ்டீபன் ராஜ் மற்றும் ஆண்டனி தரப்பினர் திடீரென இரு கோஷ்டிகளாக ஒருவரை ஒருவர் தாக்கினர். இதில் இரு தரப்பில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். குளச்சல் போலீசார் இரு தரப்பினர் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.